யானை எல்லாம் இப்ப எந்த ஏரியால இருக்கு?
வெண்மையான நுரையின் மேல் பிரவுன் கலர் டிகாஷன் வளையமாக இறங்கி பிளஸ் டூ வேதியியலின் நைட்ரேட்டுக்கான வளைய சோதனையை நினைவுபடுத்தும் டீ டம்ளரை கையில் வாங்கியபடி கேட்டேன்

நீங்க சன் டிவியிலிருந்து வர்றீங்களா?
இல்லை என்றதும் கடைக்காரரின் முகத்திலிருந்த ஆர்வம் வடிந்து விட்டது
நான் பழனி தான் புளிய மரத்து செட்லல யானை இருக்குன்னு பேப்பர்ல பார்த்தேன் அதுதான் பாக்கலாம்னு வந்தேன்

அந்த கம்பத்துக்கு
பக்கத்துல ஒரு ரோடு போகுது பாருங்க அதுல போனீங்கன்னா வாட்டர் டேங்க் வரும் அதை ஒட்டி பாலசமுத்திரம் ரோட்டுல கொஞ்ச தூரம் போங்க அந்த காட்டுல தான் நின்னுட்டு இருக்குதுங்க.பாத்து போங்க தம்பி போன வாரம் பெரியசாமிய
மிதிச்சு கொன்னுருச்சுக.
டீக்கடையில் இருந்த ஆறு பேரும் டிவி திரையில் மூழ்கியிருந்தார்கள் இப்போது யானை வந்தால்,திரும்பிப் பார்ப்பார்களா என்று தெரியவில்லை

பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதையில் மலைப்பாதை ஆரம்பிக்கும் இடத்தில் தேக்கு மரங்கள் அடர்ந்திருக்கும் வனத்தில் வருடந்தோறும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து யானைகள் வந்து போவதுண்டு இந்த முறை அவை திரும்பிச் செல்லாமல் தங்கிவிட்டது தான் ஆச்சரியம்
கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்து சேதத்தை உண்டாக்கியதோடு,சென்ற புதனன்று காவலாளி பெரியசாமியை வீசி எறிந்து கொன்றதிலிருந்து அந்த பகுதி முழுவதும் பயம் விரவியிருக்கிறது
வனத்துறையினர் சேர்ந்து பொதுமக்களும் என்னென்னவோ செய்து பார்த்தும் அவை நகர்வதாயில்லை விடிய விடிய ஸ்பீக்கர்களில் பாடல்கள் இரைந்துகொண்டிருந்தன அந்த பகுதி முழுவதும் டியூப் லைட்கள் கட்டப்பட்டன.வெடிகளை வீசி சற்று தொலைவு துரத்திவிட்டு வந்தாலும் மீண்டும் ஊருக்குள் வந்து விடுகின்றன
கரிக்காக காட்டல தீய வச்சு விடறானுக. நெருப்புக்கு பயந்து போக மாட்டேங்குதுங்க.
வழக்கமா போற பாதையில ஒரு கூட்டம் மரத்தை வெட்டி கடத்திக்கிட்டிருக்கு.அவனுகதான் திருப்பி விரட்டி அடிக்கிறானுக.
அந்த கூட்டத்தில் ஒரு குட்டி யானைக்கு கால் முறிஞ்சிருச்சு அதனால தான் போக மாட்டேங்குதுக.
தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் எத்தனை கதாசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் தான் தெரிய வருகிறது
அதெல்லாம் ஒன்னும் இல்ல இந்த முறையும் வரதமா நதி அணையும்,பாலாறு-பொருந்தலாறு அணையும் நிரம்பி இருக்கு. அதோட சோளம்,மா,கொய்யா கரும்புன்னு விதவிதமா பயிர் பண்ணி வச்சிருக்காங்க அதுகளும் சோறு கண்ட இடம் சொர்க்கம்னு தங்கியிருச்சு. காட்டுக்குள்ள திரும்பி போய் வீடு வாசலையா கவனிக்க போகுது என்று டீக்கடை கவுண்டர் சொல்லிச் சிரித்தார். சரி எதற்கும் அவைகளையே கேட்டு விடுவோம் என்றுதான் கிளம்பி வந்திருக்கிறேன்
கோவில் பக்கத்துல தினமும் நிக்குது பத்து ரூபாய் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிட்டு நாள்பூரா நின்னு பார்த்துக்கிட்டு இரு இல்ல பேசாம தேவஸ்தானத்தில் யானைப்பாகனா வேலைக்கு சேர்ந்துரு.அதை விட்டுட்டு எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கிற என்ற வார்த்தைகளையெல்லாம் மதிக்காமல் சின்னாறு தேக்கடி கட்டளை மாரியம்மன் கோயில் முதுமலை மசினகுடி என்றெல்லாம் நான்,யானைகளை துரத்திக் கொண்டு இருப்பதன் ரகசியம் இன்னமும் பிரித்து அறியப்படாத என் ஜீன்களின் ஆழத்தில் மறைந்து இருக்கக்கூடும்
வண்டியின் வேகத்தை குறைத்து, எதிரில் வந்த ஒருவரிடம் இங்க யானைங்க என்றதும் இருபுறம் இறகுகள் போல் விரிந்திருந்த தென்னங்கீற்று சுமையோடிருந்த உடலைத் திருப்பி மலைத்தொடர்களில் கைகாட்டி அந்த ஓடையில் தான் இருக்கு நாங்க தான் விரட்டி விட்டோம். என்றபடி, கூட வந்த சிறுவனிடம் ராசு நீ சாரை கூட்டிக்கிட்டு மட்டப்பாறைல உட்காரு.இத விட்டுல போட்டுட்டு வந்தர்றேன் நீங்க போங்க சார் என்று நடக்க ஆரம்பித்தார்.
மிகுந்த உற்சாகத்துடன் வண்டியில் ஏறிய ராசு நேரா போங்க சார் என்றான்
போனேன்
சின்னக் குன்று அதன் உச்சியில் பெரிய பாறை அதில் ஏறுவதற்கு வசதியாக கயிற்று ஏணி மேலே தாராளமாக மூன்று பேர் உட்காரலாம் நானும் ராசுவும் உட்கார்ந்தோம்
சுற்று வட்டாரம் முழுவதும் ஒரு பருந்துப் பார்வையில் தெரிந்தது பழனி மலையும் இடும்பன் மலையும் மினியேச்சர் சைஸில் தெரிய, எதிர்புறம் கண்களை மறைத்து விரிந்திருந்த மலைத்தொடரில் கொடைக்கானல் செல்லும் பேருந்து சின்ன தீப்பெட்டி போல நகர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது பத்து வருடங்களுக்கு முன்பு வாகனங்கள் செல்வது தெரியாத அளவு மரங்கள் அடர்ந்திருக்கும் வயது முதிர்ந்த அத்தனை மரங்களும் யார் யாருக்கோ பேங்க் பேலன்ஸாக மாறிவிட்டன

உன் பெயர் என்ன?
ராசப்பன்
படிக்கிறியா
ஆமா சார் நாலாவது படிக்கிறேன்
கருப்பாக,களையாக இருந்தான். மனித வக்கிரங்களின் நிழல் படியா முகம்.
போட்டோ புடிப்பீங்களா சார்?
நல்லா உட்கார் என்று சொல்லி வெண்மேகங்கள் புரண்டு படுத்துக் கொண்டிருந்த மலைத்தொடரின் பின்னணியில் அவனை புகைப்படத்தில் பதிவு செய்தேன்
என்னடா ராசப்பா சாரு யாரு?
குரல் கேட்டு திரும்பினேன்
ஆன பாக்குறதுக்கு வந்திருக்காரு என்று என்னை அவரிடமும், எங்க பெரியப்பா என்று அவரை என்னிடமும் அறிமுகப்படுத்தினான்.
மணி என்ன ஆச்சு?
பார்த்து, அஞ்சு ஆக போகுது என்றேன்
சரி சரி வர நேரம் தான் அதை நான் தான் முதலில் பார்த்தேன் மொத்தம் பதினெட்டு ஆனைங்க.ஆடு மேச்சுக்கிட்டு இருந்தேன் ஆனைக கத்துதுக. என்னனு பார்த்தேன் எல்லா ஆனையும் மலையிலிருந்து இறங்கிருச்சுக.குட்டி மட்டும் மாட்டிக்கிச்சு அந்தா தெரியுது பாருங்க பொட்டவெளி அதுக்குள்ள நின்னுகிட்டிருந்துதுக.நான்தான் பின்னாடி போய் குட்டிய விரட்டி விட்டேன் பெருமிதம் வழியும் கண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்

அங்க பாருங்க நிக்குதுக
விரல்கள் நீண்ட திசையில் பார்த்தேன் ஒன்றும் புலப்படவில்லை
நல்லா பாருங்க முதுகு மட்டும் தெரியுது பாருங்க. வா மாப்ள வா, எவ்வளவு நேரம் மரத்துக்கு கீழே யே நிப்ப?
ஆர்வமும் பரபரப்புமுமாய் மறுபடியும் கூர்மையாகப் பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை
எங்க?

என்ன சார் ஓடையில் நிக்குதுக..தெரியலேன்றீங்க. வர்றீங்களா பக்கத்துல போய் பாப்போம்
அட்ரினலின் அதிகரிக்க,உடனே சரி என்றேன்
பாறையிலிருந்து இறங்கும் போது ராசுவும் கூட வந்தான்
தம்பி வேணாம் நீ இங்கே உட்காரு
நானும் வரேன்
சொன்னா கேளு
அவன் வரட்டும்
சார்.தெனமும் பாத்துட்டு தான் இருக்கான் காட்டிலேயே பொறந்து வளர்ந்த பய. பயம்னா என்னன்னு தெரியாது நீ வாடா
இறங்கி நடந்தோம்
நெருங்க நெருங்க யானைகள் உண்டாகியிருந்த அழிவு கண்ணெதிரே விரிந்தது மரக்கிளைகள் தாறுமாறாக உடைந்து கிடந்தன தென்னங்குருத்து குழியில் இருந்து பிடுங்கி வீசப்பட்டிருந்தன சமீபத்திய மழையில் நனைந்து ஊறியிருந்த மண்ணில் யானைகளின் சுவடுகள் அழுத்தமாக செதுக்கப்பட்டிருந்தன சின்னதும் பெரியதுமாய் பல அளவுகளில் காலடித்தடங்கள் ஒரு சுவடினுடைய விட்டம், என் கையில் கிட்டத்தட்ட ஒரு முழம் இருந்தது அதன் பிரம்மாண்டத்தை உணர முடிந்தது
சமவெளி தாண்டி வனத்தில் நுழைகையில் திகிலின் உச்சத்தில் உடல் படபடக்க ஆரம்பித்தது அவர் தேட ஆரம்பித்ததும் எனக்கு சந்தேகம் தோன்றியது
என்ன தேடுறீங்க?
இந்த ஓடையில் தான் நிக்கும்
பாத்தேன்னு சொன்னீங்களே
ஏதாவது ஒரு மரத்தின் பின்னாலிருந்து எந்த வினாடியும் யானைகள் வெளிப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை உணர்ந்ததும் காலடித்தடம் ஒரு வினாடி தோன்றி மறைந்தது சரி போகலாம் என்றேன்
திரும்பி வந்ததும் உனக்கு அறிவிருக்கா என்ற குரல் தாக்கியது
அதிர்ந்து திரும்பினேன்
ராசப்பனின் அப்பா
ராசப்பனின் பெரியப்பாவை நோக்கித்தான் அடுத்தடுத்து அஸ்திரங்கள் பாய்ந்தன.
பச்ச மண்ணக் கூட்டிகிட்டு காட்டுக்குள்ள போய் இருக்கயே. திடீரென ஆன வந்து நின்னா?
இங்க பாருங்க உங்க கோபமும் ஆத்திரமும் நியாயம்தான் ஆனால் தப்பு எங்க மேல இல்ல வேணாம்னு சொல்ல சொல்ல உங்க பையன் தான் கூட வந்தான் வேணும்னா அவனையே கேட்டுப்பாருங்க
சார் உங்கமேல கோபப்பட எனக்கு ஒன்னும் இல்ல உங்களுக்கு ஒன்னும் தெரியாது நீங்க இந்த ஏரியாவுக்கு புதுசு இவனுக்குத் தான் அறிவு வேணும்
சரி விடுடா ஆன வந்தா என் உயிரை கொடுத்தாவது காப்பாத்த மாட்டனா
கிழிப்ப.அது எவ்வளவு பெரிய ஜீவன் பார்த்த இல்ல.ரங்க சாமி கரடே எந்திரிச்சு வந்த மாதிரி இருக்கு அது வந்து நின்னா தெறிச்சு ஓடிடுருவ.
சரி விடுங்க தெரியாம போயாச்சு
சிறிது நேர தர்மசங்கடமான மௌனத்திற்குப் பின் ராசப்பனின் தந்தை கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தார்
நேத்து காலையில ஆறு மணி இருக்கும் எந்திரிச்சு சாலய விட்டு வெளியே வந்தேன் திபுதிபுன்னு எட்டு உருப்படிக,சின்னதும் பெருசுமா சாலயோரமாக போகுதுக.உசிரே போயிருச்சு ஊர்ப்பட்ட ஆனைக இருக்கு சார்.காலையில ரேஞ்சர் ஆட்களோட வந்தாரு எல்லாம் சேர்ந்து வெடி போட்டு காட்டுக்குளள துரத்திட்டு வந்தோம் வெடியபார்த்ததும் எல்லாம் பயந்து ஓடுது ஒரு ஆன மட்டும் எதிர்த்து வருது எல்லா ஆனயும் குதிரையாறு டேம் பக்கம் போயிருச்சு அந்த ஒன்னு மட்டும் தனியா போயிருச்சு முரட்டு ஆன. இங்கேதான் எங்கேயோ இருக்கு ரொம்ப கோபமா வேற இருக்கு ஆன கூட்டமாய் இருந்தா பயம் இல்ல சார் ஒத்த ஆனா எப்பவுமே ஆபத்து எங்க பார்த்தாலும் தகவல் சொல்ல சொல்லி இருக்காங்க எந்த நிமிஷமும் உயிரைக் கையில புடிச்சிகிட்டு இருக்கும் இந்த நேரத்துல சின்னப்பயல காட்டுக்குள்ள கூட்டிட்டு போனா கோவம் வருமா வராதா நீங்களே சொல்லுங்க
என்ன சொல்வதென்று தோன்றாமல் சிறிது நேரம் சரி வரேன் என்று கிளம்பினேன் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்ததும் எதிரேயிருந்த ரங்கசாமி கரடு என அழைக்கப்படும் பெரிய ஒற்றை மலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
புளிய மர செட்டிலிருந்து பழனிக்கு வரதமா நதி அணை வழியாகவும் போகலாம்.ரங்கசாமி கரடை ஒட்டிய வனப் பகுதியில் பாலசமுத்திரம் வழியாகவும் போகலாம்.எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் போனது.வழி எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.பழனிச்சாமியைக் கேட்டால் தெரியும்.அலைபேசியை எடுத்து பழனிச்சாமியை அழைத்தேன்.முழு அழைப்பிற்கும் பதிலில்லை.
சரி போய்ப் பார்க்கலாம் என்று வண்டியை உயிர்ப்பித்து நகர்த்தினேன்.குண்டும் குழியுமான மண் பாதையில்,தேங்கியிருந்த மழை நீரில் சக்கரங்கள் புதைந்து மீண்டன.ச்சே,வந்திருக்கக் கூடாது என்று வாய் விட்டே சொல்லி விட்டேன்.
வேப்ப மரக்கிளையொன்றில் கரிச்சான் அமர்ந்து பாடியபடி சிறகுகளை உலர்த்திக் கொண்டிருந்தது.ரங்கசாமி கரடு,கொடைக்கானல் மலைத் தொடர்கள் என எங்கும் வெண் மேகங்கள் அடர்ந்து படர்ந்திருந்த அழகு அற்புதமான காட்சியாய் மிளிர்ந்தது.
பாலசமுத்திரத்தின் செங்கல் சூளைகளின் புகை போக்கி கோபுரங்களைப் பார்த்த போதுதான் அந்த ஓசையைக் கேட்டேன்.
சட்டென்று என் புலன்கள் கூர்மையாயின. வண்டியை நிறுத்தினேன் இப்போது தெளிவாக கேட்டது மரக் கிளைகள் உடைபடும் ஒலி.

தாபம் கொண்ட
மோகினியைப்போல் என்னை அழைத்தது அந்த ஒலி மரங்களுக்கிடையே மெல்ல முன்னேறினேன் ஒரு திருப்பத்தில் கண்ணில் பட்டது யானை
ஒற்றை யானை எனக்கு பின்பக்கத்தை காட்டிகொண்டு மரக் கிளைகளை உடைத்து கொண்டிருந்தது
ஒத்த ஆன,ரொம்ப டேஞ்சர் என்று ராசப்பனின்அப்பா சொன்னது இதுவாகத்தான் இருக்க வேண்டும் கொஞ்சம் முன்னே நகர்ந்து மரங்களுக்கு இடையே நின்று கவனித்தேன் இப்போது தெளிவாக தெரிந்தது
கடவுளே எவ்வளவு பெரிய உருவம் பூமியில் நாம் பார்க்கக்கூடிய மிகப்பெரிய உயிரினம் பரவசமும் பயமும் ஒரே நேரத்தில் என்னை தாக்கின உடல் நடுங்க ஆரம்பித்தது கேமராவை எடுத்து Zoom செய்தேன்.அந்தி வேளை,அதோடு மரத்தின் கீழே நின்றிருந்ததால் தெளிவாக இல்லை.
இன்னும் கொஞ்சம் பக்கத்தில் போகலாமா வேண்டாம் திரும்பி விடலாம் என்று மனசு சொல்லிக்கொண்டிருக்கும் போதே உடல் கட்டுப்பாடு இல்லாமல் முன்னே நகர்ந்து கொண்டிருந்தது.
விட்டு விட்டு ஒலிக்கும் பறவைகளின் குரல்கள் கலைத்து மீளும் அமைதியில் கண்களை நிறைக்கும் பிரமாண்டமான என் ப்ரியத்துக்குரிய பேருயிரின் வெகு அருகில் நின்றிருந்தேன்.பின்னிரு கால்களையும் அகற்றியது.அருவியென ஓசையுடன் வீழும் நீரினை,அசையும் வாலினை பார்த்துக் கொண்டிருந்தேன். உயரத்திலிருந்து வீழும் பச்சை நிற பிண்டங்களின் மணம் நாசிகளில் நிறைந்தது.தரையில் வீழ்ந்து சிதறும் அவற்றின் வெம்மையை உணர முடிந்தது.
சுருக்கங்கள் நிறைந்த துதிக்கையை உயர்த்தி அகன்ற காதுகள் அசைய மரக் கிளையை முறிக்கும் காட்சியை துல்லியமாக புகைப்படத்திலும்,காணொளியிலும் பதிவு செய்தேன்.ஒத்த ஆன ரொம்ப டேஞ்சர் ராசப்பனின் அப்பாவின் குரலை உண்மையிலேயே திரும்பவும் கேட்டேனா?சட்டென்று அத்தனை புலன்களிலும் அச்சமும் திகிலும் கரை புரண்டோட,திரும்பி விடலாம் என நினைத்த வேளையில் அலைபேசி உரக்க ஒலிக்க ஆரம்பித்தது.

No comments:
Post a Comment