சென்னை எக்மோரில் இருந்து விழுப்புரம் திருச்சி வழியாக மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் மூன்றாம் நடைமேடையில் இருந்து புறப்படத் தயாரான சமயம்.
சார்.வொய்ஃபுக்கு டெலிவரி டைம்.இரண்டு நாள் மட்டும் லீவு வேணும்.
சார்.வொய்ஃபுக்கு டெலிவரி டைம்.இரண்டு நாள் மட்டும் லீவு வேணும்.
ஷங்கர்,உங்க நிலைமை எனக்கு புரியுது.இந்த நிலைமையில உங்கள கட்டாயப்படுத்த எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. என்ன செய்ய? நம்ம ஹெட் ஆபீஸ்லலேர்ந்து வர்றது எவ்வளவு முக்கியமான ஆட்கள்ன்னு உங்களுக்கே தெரியும்.அதோட,இந்த பிளானை துல்லியமாக, தெளிவா பிரசென்ட் பண்றதுக்கு உங்களைத் தவிர வேற யாராலும் முடியாது.
அரை மனதுடன் ஒத்துக்கொண்டு டெல்லியிலிருந்து வந்திருந்தவர்களை திருப்தியாகும்படி கவனித்து அனுப்பி விட்டு, இதோ பழனி செல்ல,நல்லவேளையாகக் கிடைத்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்.புதன் கிழமை
என்பதால் வண்டியில் பெரிதாகக் கூட்டமில்லை.
மிகப் பெரிய எதிர்பார்ப்பில் மனமும் உடலும் அதிர்ந்து கொண்டிருந்தது.
தண்டவாளங்களும், நிலையமும் அதிர அதிர அறிவிப்புகளின் பின்னணியில் ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் நிலையத்தினுள் நுழைந்து கொண்டிருந்தது.
காலையிலேயே அட்மிஷன் போட்டு விட்டதாக அம்மா சொன்னார்கள்.ஜானகியிடமும் தைரியம் சொல்லியாகிவிட்டது.
அருகிலிருந்து நடுங்கும் கரங்களைப் பற்றிக் கொண்டு, நெற்றியில் முத்தமிட்டு உடனிருந்து சொல்ல வேண்டிய வார்த்தைகளை அலைபேசியில் சொல்ல நேர்ந்ததை என்னென்பது.
வந்து நின்ற வண்டியிலிருந்து இறங்கியவர்கள்,டீ,காபி,சாப்பாடு விற்பவர்கள்,ஓட்டமும் நடையுமாய் பெட்டிகள் தேடி அலைபவர்கள் என அத்தனை இரைச்சல்களிலும் பரபரப்பிலும் ஒட்டாமல் அமர்ந்திருந்தபோது அலைபேசி அதிர்ந்தது.
அம்மா
ஹலோ என்றதும் மறுமுனையில் உற்சாகமாய் வழிந்தது அம்மாவின் குரல்.

பேத்தி பொறந்திருக்காடா அப்படியே உன்னை உரிச்சு வச்சிருக்கு. சுகப்ரசவம்தான்.. ஜானகி நல்லாருக்கா. நீ
கௌம்பியாச்சா?
வைகைல உட்கார்ந்திருக்கேன்மா.ஜானகி ருமுக்கு வந்தாச்சா?
இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். நீ பதறாம நல்லபடியா வந்து சேரு. வச்சிரட்டுமா.
நன்றாகச் சாய்ந்து தளர்வாக அமர்ந்தேன். ஒரு பரவசம் அலையலையாய்ப் பரவ ஆரம்பித்தது.
நண்பர்களுக்கு உறவினர்களுக்கு போன் செய்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டேன்.
அப்பாவாகி விட்டேன். கடவுளே நன்றி. பத்து மாத புதிர் அவிழ்ந்து கிடைத்த விடை. ஒரு புதிய உயிரின் வரவு உறுதி செய்யப்பட்ட வினாடியிலிருந்து எத்தனை எதிர்பார்ப்புகள், கவலைகள், அச்சங்கள்.நரம்பும் சதையுமாக என்னை உருக்கி அவளுக்குள் வார்க்கப்பட்ட எங்கள் மகள். உடலும் மனதும் மிதப்பது போல உணர்ந்த போது நான் சற்றும் எதிர்பாராமல் மனதின் அடியாழத்திலிருந்து ஒரு எண்ணம் சரசரவென மேலேறி வந்து படமெடுத்து சீறியது.

பையனாகப் பிறந்திருக்கக் கூடாதா,
சட்டென உதறியும் அந்த ஏக்கம்,சிலந்தி வலை போல விலக்க விலக்க மேலும் அடர்ந்து படர்ந்தது.
பையனென்ன பொண்ணென்ன எல்லாம் ஒண்ணுதானே.
அதெப்படி?பொண்ண வளர்த்து ஆளாக்கி நல்லவன் கையில புடிச்சு கொடுக்கறவரை நிம்மதி ஏது?
அடுத்தது பையனாயிருக்கலாமே.
அதுவும் பொண்ணாயிட்டா?ஆம்பள வாரிசுன்னு ஒண்ணு இல்லாமலே போயிருமே.நாளைக்கு வயசான காலத்துல நம்ம பையன் வீட்ல உரிமையோட உட்காராம,பொண்ணு கொடுத்த மாப்ளைக வீட்ட நம்பித்தான் வாழணுமா?
குரல்கள் உள்ளே ஒலிக்க ஒலிக்க மனம் பிளவுபட ஆரம்பித்தது.
ஏமாற்றத்தின் கருமை,என் முகத்தில் படிவதை,அடர்வதை
எவ்வளவு முயன்றும் தவிர்க்க முடியவில்லை.
இதெல்லாம் பிரமையாக இருந்து அம்மா போனில் சிங்கக்குட்டி பிறந்திருக்கான்டா என்று சொன்னால் என்று ஒரு பைத்தியக்கார எண்ணம் தோன்றி மறைந்தது.
சற்றுமுன் அத்தனை சந்தோஷமாக இருந்தது நான்தானா?
சற்றுமுன் அத்தனை சந்தோஷமாக இருந்தது நான்தானா?
வணக்கம் சார் என்றபடி அருகில் அமர்ந்தவரின் முகம் பரிச்சயமாயிருந்தது. அவரும் வழக்கமாக இதே ட்ரெயினில் வருபவர்தான்.புன்னகைப்பதோடு சரி.இதுவரை பேசிக் கொண்டதில்லை.
வணக்கம் என்றேன்.
சாரை அடிக்கடி பாத்திருக்கேன். பேசினதில்ல. பேசக்கூட தோணல. ஓட்டமாக ஓடிக்கிட்டிருக்கிற வாழ்க்கையில பேசவெல்லாம் நமக்கு நேரமேது.இல்லையா சார். தப்பா நினைக்காதீங்க உங்க பேரு?
ஷங்கர்.
சந்தோஷம்.என் பேரு குமார்.
சாரை அடிக்கடி பாத்திருக்கேன். பேசினதில்ல. பேசக்கூட தோணல. ஓட்டமாக ஓடிக்கிட்டிருக்கிற வாழ்க்கையில பேசவெல்லாம் நமக்கு நேரமேது.இல்லையா சார். தப்பா நினைக்காதீங்க உங்க பேரு?
ஷங்கர்.
சந்தோஷம்.என் பேரு குமார்.
எடுத்துக்கங்க என்று நீட்டிய பிளாஸ்டிக் பெட்டியில், சுலபத்தில் வீசியெறிய மனம் வராத வண்ணத்தாள்களில் பொதியப்பட்டிருந்த சாக்லேட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு என்ன விசேஷம் சார்? என்றேன்.
ப்ரமோஷன் கிடைச்சிருக்கு.
வாழ்த்துகள் என்ன ப்ரமோஷன்?என்னவா
வொர்க் பண்றீங்க?
ஆபீஸ்லயெல்லாம் இல்ல சார்.அப்பாங்கற புரமோஷன். எங்க வீட்டுக்கு மகாலட்சுமி வந்திருக்கா சார். எனக்கு பொண்ணு பொறந்திருக்கா.
ஒரு உலுக்கலுடன் வண்டி நகர ஆரம்பித்தது.
கல்யாணமாகி பனிரெண்டு வருஷம்.ஆச்சு. ரெண்டு பேருக்கும் எந்தக் குறையுமில்லேன்னுதான் எல்லா ரிப்போர்ட்டும் சொன்னது. பார்க்காத வைத்தியமில்ல. போகாத கோவில் இல்ல.நல்லது கெட்டதுக்கு போயிட்டு சந்தோஷமா திரும்ப முடியாது. ஒவ்வொரு மாசமும் ஒரு மாச நம்பிக்கைய சிதைச்சிட்டு விடியற அந்த நாள்ல கதறி அழுகறவள, உள்ளுக்குள்ள அழுதுகிட்டே சமாதானப்படுத்தியிருக்கேன். சரி, இந்த ஜன்மத்தில நமக்கு ப்ராப்தம் இல்லேன்ணு மனசத் தேத்திகிட்டு வாழ்ந்திட்டிருந்தோம். தாகத்தில உயிர் பிரியற கடைசி நிமிசத்தில உதடுகள நனைக்கிற அமுதம் மாதிரி வந்திருக்கா சார்.
இமையோரங்கள் மின்ன பரவசமாய் பேசிக் கொண்டிருந்தார்.இத்தனை நாள் ஒரு வார்த்தை கூட பேசாத மனிதர் இன்று இவ்வளவு பேசுகிறார் என்பது பெரும் ஆச்சரியமாக இருந்தது
ஹாஸ்பிட்டல்ல ரெண்டு நாள் வலியே வரல.ரொம்ப நாள் கழிச்சு உண்டாயிருக்கறதால அநேகமா சிசேரியன்தான் பண்ண வேண்டியிருக்கும்னு சொன்னதால அதுக்கும் தயாராத்தான் இருந்தோம்.திடீர்னு வலி வந்திருச்சு.பக்கத்துல யாரும் இல்ல.என் விரல்கள நொறுக்கின அவளோட விரல்கள் வழியே அவளுக்குள்ள தீவிரமா இறங்கிக்கிட்டிருந்த வலியை என்னால உணர முடிஞ்சுது.இதுதான் ஆரம்ப வலியாம்.கடவுளே அப்படின்னா உச்ச வலி எப்படியிருக்கும்.அப்படியே நடுங்கிப் போய்ட்டேன் என்னை வெளியில போகச் சொல்லிட்டாங்க.
நடந்து கொண்டிருந்த ஆட்களை,தடுமாறி எங்கள் எதிர் இருக்கையில் அமர்ந்த பெரியவரை அவர் கவனிக்கவேயில்லை.கோணிய உதடுகளை சுதாரித்து சரி செய்து கொண்டார்.
நடந்து கொண்டிருந்த ஆட்களை,தடுமாறி எங்கள் எதிர் இருக்கையில் அமர்ந்த பெரியவரை அவர் கவனிக்கவேயில்லை.கோணிய உதடுகளை சுதாரித்து சரி செய்து கொண்டார்.
பெண்களை வெறும் உடம்பா நினைச்சுகிட்டிருந்த என்னை அந்த நிமிஷங்கள் புரட்டிப் போட்டிருச்சு சார்.குழந்தை பிறக்கறதுல ஆணுக்கு எள் முனையளவும் வேதனையில்ல.ஆனா பெண்ணுக்கு?கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தா அவர் கண்டிப்பா ஆணாத்தான் இருக்கணும்.இல்லேன்னா பெண்களுக்கு
இவ்வளவு ஓரவஞ்சன பண்ணியிருப்பாரா?.மனித இனத்தோட சங்கிலியின் நுட்பமான கண்ணிகள் அறுந்து போகாம காப்பாத்தறதுல பெண்ணோட பங்கு எவ்வளவு பெரியது..வலி தாங்கி பிள்ளை பெறமுடியாதுன்னு பெண்கள் சொல்லிட்டா மனித இனத்தோட கதி என்ன ஆகும்?
சற்று நேரம் வண்டியின் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. பேரிரைச்சலோடு எதிர்த்
திசையில் ஒரு வண்டி கடந்து போனது.
உணர்ச்சிகளின் உச்சத்தில் பேச்சற்று அமர்ந்திருந்தவரிடம் சாக்லேட்டைத் திருப்பிக் கொடுத்தேன்.
புருவம் உயர்த்தி பார்த்தவரிடம் பெருமிதமாய்ச் சொன்னேன்.
குமார் சார்.எங்க வீட்டுக்கும் இன்னைக்கு மகாலட்சுமி வந்திருக்கா.

No comments:
Post a Comment